சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர பெத்ததந்திரி நாடாளுமன்ற பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஞ்சுள செனரத் பதில் பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்று யாழ்ப்பாண மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்தே நாடாளுமன்ற பொலிஸ் பிரிவுக்கு பெத்ததந்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

