வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் திருடப்பட்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மீகஹதென்னை பொலிஸ் நிலைய நிர்வாகப் பகுதி பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஹிக்கடுவ, பத்தேகம, காலி, கராப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள அரச வங்கிகள் பலவற்றின் கணினியை ஊடுருவி பெருந்தொகையான பணத்தை வெளிநாட்டவர்கள் இருவர் திருடியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர்களை கைதுசெய்து முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணைகளையடுத்தே மீகஹதென்னை பொலிஸ் நிலைய நிர்வாகப் பகுதி பொறுப்பதிகாரி சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் பரிசோதகர் பிடிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அமுகொட பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

