மலையக மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும் ஆண்டாகட்டும்

163 0

பெருந்தோட்ட மலையக மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும் ஆண்டாக பிறந்திருக்கும் 2023 அமைய வேண்டும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாடு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி சூழலில் இருந்து விரைவாக மீண்டெழ 2023ஆம் வருடம் வழிவகுக்க வேண்டும் என்பது எனது பிரார்த்தனையாகும்.

பொருளார நிலை ஏறுமுகம் நோக்கி பயணிக்கவும் மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கவும் வாழ்வு செழிக்கவும் நலன்கள் தழைத்திடவும், வளங்கள் பெருகி வெற்றிகள் தொடர்ந்திடவும் எனது தொப்புள்கொடி உறவுகளான பெருந்தோட்ட மலையக மக்களின் அபிலாஷைகள் எல்லாம் நிறைவேறவும் புதிய ஆண்டு வழி செய்ய வேண்டும்.

மலர்ந்திருக்கும்  இவ்வருடம்  நலமாக அமையவும் இறைவனின் ஆசி நிறைந்திருக்கவும் எல்லா வல்ல இறைவனை பிரார்த்திப்பதோடு அனைவருக்கும்  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.