இல்லங்கள் தோறும் மகிழ்ச்சியும், உள்ளங்கள் தோறும் நிம்மதியும் நிலைபெறும் ஆண்டாக பிறக்கும் இப் புதுவருடம் மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் சந்தோசமும் சுபீட்சமும் தந்தருள, இலங்கை மனதிருப்தி கொள்ளும் இனிய வரத்தை தந்தருளட்டும் என இ.தொ.கா பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பிறக்கின்ற 2023ஆம் ஆண்டு மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு.
இன்று எம்மக்கள் அனைவருக்கும் சலுகைகள், உரிமைகள், வசதி வாய்ப்புக்கள் அத்தனையும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சாணக்கியத்தாலும் போராட்டங்களாலும் பெறப்பட்டவை என்பதை எவரும் இலகுவில் மறந்துவிட முடியாது.
2023ஆம் ஆண்டு நம்பிக்கை வலுவூட்டும் ஆண்டாகவும் பெருந்தோட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்ற வழிகாட்டும் ஆண்டாகவும் திகழ வேண்டும். மக்களின் தேவைகளிலும் அவர்களது முயற்சிகளிலும் நாம் கை கொடுப்போம்.
அனைத்து உள்ளங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

