நிம்மதியாக வாழ்வதற்கு வழி பிறக்க வேண்டும்

145 0

கடந்த ஆண்டில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த எமது நாடும் மக்களும் மலர்ந்துள்ள புத்தாண்டில் அதிலிருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ்வதற்கு வழி பிறக்க வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் விடுத்துள்ள புத்தாண்டு செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தமது செய்தியில்,

கொரோனா பரவல் மற்றும் அரசியல் நெருக்கடி போன்ற காரணங்களால் கடந்த மூன்று ஆண்டுகளாக பொருளாதார ரீதியில் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருந்தார்கள். இந்த ஆண்டில் மாற்றங்கள் ஏற்பட்டு பொருளாதாரம் சீராக வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

அத்தோடு, எமது மூதாதையர் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவேறுவதை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அதை நினைவுகூருவதோடு மாத்திரம் நின்று விடாமல் அரசியல் ரீதியில் தொடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகித்து மலையக மக்களின் உரிமைகளையும், எதிர்ப்பார்ப்புகளையும் வென்றெடுக்க ஒன்றுபடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.