அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும்

163 0

மலர்ந்துள்ள 2023ஆம் ஆண்டு உலக மக்கள் அனைவருக்கும் சுபீட்சத்தையும் சமாதானத்தையும் அமைதியையும் பெற்றுத்தர வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நம்பிக்கைகளுடன் இந்த புத்தாண்டை மக்கள் வரவேற்கின்றனர். அவர்களது நம்பிக்கையும் எதிர்பார்ப்புகளும் இப்புத்தாண்டில் நிறைவேற வேண்டும்.

மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும் கிடைத்திட வேண்டும் என்பதுடன் பொருளாதார ரீதியான நெருக்கடிகள் தீர்ந்து மகிழ்ச்சி பெருகிட வேண்டும்.

பழைய ஆண்டு கற்றுத் தந்த பாடங்களில் இருந்து புதிய ஆண்டில் நாம் வாழ்வை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய கனவுகளோடு, நம்பிக்கைகளோடு புத்தாண்டை வரவேற்போம்.

அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும். மலையக மக்கள் வாழ்வில் இந்த ஆண்டு புதிய ஒளி வீசவேண்டும் எனவும் செந்தில் தொண்டமான் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.