தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வடக்கு மாகாண பணிப்பாளராக தெய்வேந்திரராஜா நியமனம்

196 0

யாழ். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் முன்னாள் அதிபர் ந.தெய்வேந்திரராஜா, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வடக்கு மாகாணத்திற்கான மாகாணப் பணிப்பாளராக டிசெம்பர் 15ஆம் திகதி முதல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டதாரியான இவர், இலங்கை கல்வி நிர்வாக சேவை வகுப்பு 1 அதிகாரியாவார்.

மேலும் இவர் முன்னாள் யாழ். வலையக் கல்விப் பணிப்பாளரும் பருத்தித்துறை ஹிட்லிக் கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.