412 பயணிகளுடன் போயிங் 777 ‘ரெட் விங்’ (Red Wing) என்ற ரஷ்ய விமானம் இன்று வியாழக்கிழமை (டிச 29) காலை 9.00 மணியளவில் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

மொஸ்கோவிலிருந்து வந்த இந்த விமானம் ரஷ்யாவில் உள்ள 23 வருடகால சேவைகளை முன்னெடுக்கும் ‘ரெட் விங்’ விமான நிறுவனத்துக்கு சொந்தமானது.


இந்த விமானம் இன்று முதல் வாரத்தில் இரண்டு தடவைகள் மொஸ்கோவுக்கும் மத்தளைக்கும் இடையில் சேவையில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளதாக விமான நிலைய முகாமையாளர் தெரிவித்தார்.


