கண்டி மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளின் பெண் உறுப்பினர்கள் இணைந்து கட்சி பேதமின்றி கூட்டிணைப்பு ஒன்றை வியாழக்கிழமை (டிச. 29) உருவாக்கியுள்ளனர்.
கண்டி டெவோன் ஹோட்டலில் இக்கூட்டம் நடை பெற்றது.
தேசிய சமாதான சபை மற்றும் கண்டி மாவட்ட சர்வமத அமைப்பு என்பவற்றின் ஆலோசனையுடன் தத்தமது பிரதேசங்களில் அபிருத்தி மற்றும் இன நல்லிணக்க வேலைத்திட்டங்கனை செயற்படுத்த இக் கூட்டிணைப்பு முடிவு செய்துள்ளதாக அதன் ஏற்பாட்டளரும் கண்டி மாவட்ட சர்வமத அமைப்பின் அழைப்பாளருமான காமினி ஜயவீர அங்கு தெரிவித்தார்.
அக்குறணை, கலகெதர, தும்பனை, ஹாரிஸ்பத்துவ, பாத்ததும்பறை,மெத தும்பறை, உடதும்பறை, குண்டசாலை உட்பட 20க்கும்மேற்பட்ட பிதேச சபைகளின் பெண் உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.
கண்டி மாவட்ட சர்வமத அமைப்பின் செயலாளர் சுனில் கொக்கல உற்படப் பலர் இங்கு உரையாற்றினர். மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டவர்களையும் செயற்குழு அங்கத்தவர்களையும் படங்களில் காணலாம்.

