யானை, மொட்டு மற்றும் தொலைபேசியுடன் கூட்டணி அமைக்க போவதில்லை

190 0

யானை, மொட்டு மற்றும் தொலைபேசியுடன் கூட்டணி அமைக்க போவதில்லை. ஏனைய அரசியல் தரப்பினருடன் கூட்டணியமைக்க ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

இலங்கை கம்யூனிச கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை இரவு (டிச. 26)  இலங்கை மேலவை கூட்டணியின் உறுப்பினர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் கூட்டணியாக போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்களாணை கிடையாது.ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்கள் மத்தியில் நல்ல நிலைப்பாடு கிடையாது.

யானை, மொட்டு மற்றும் தொலைபேசியுடன் கூட்டணியமைக்க போவதில்லை. ஏனைய அரசியல் தரப்பினருடன் கூட்டணியமைக்க ஆரம்பக்கட்ட சேசுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தீர்மானமிக்கதாக அமையும்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை. பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கத்தின் தீர்மானங்கள் காணப்படுகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்திற்கு தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்றார்.