தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த லொறி ஒன்றுடன் பஸ் மோதிக் கொண்ட சம்பவம் இன்று (23) காலை இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 73ஆவது கிலோ மீற்றர் மைல் கல்லுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸே விபத்துக்குள்ளானதாகவும் விபத்தில் காயமடைந்த 11 பேர் பல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

