மூதூர்- ஈச்சிலம்பற்று இறங்குதுறை முகத்துவாரம் பகுதியில் ஒரு கிலோ 500 கிராம் எடையுடைய வெடி பொருட்கள் மற்றும் வெடிப்பதற்கு உபயோகிக்கப்படும் வெடிமருந்துகள் உள்ளிட்ட 22 அடி நீளம் கொண்ட நூல் ஆகியவற்றை வைத்திருந்த சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஈச்சிலம்பற்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட தேடுதலின்போது, சந்தேக நபரிடம் மேற் குறித்த வெடி பொருட்கள் மற்றும் வெடி மருந்துகளுடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் இறங்கு துறை முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 47 வயதுடையவராவார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

