இரத்தினபுரி – நிவித்திகல, எலபாத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் 34 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றுக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்றிருந்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், நேற்று புதன்கிழமை (டிச 21) மாலை வேளையில் தமது வீட்டில் அமரந்துகொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பலியான பெண்ணின் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

