கல்வி அழிக்க முடியாத சொத்து, வடக்கு கிழக்கு கல்வி வளர்ச்சிக்கு கனடா உதவும் – ஹரி

383 0

hari anandasankari 4554reவடக்கு கிழக்கு மாணவர்களில் கல்வி வளர்ச்சிக்கு கனடா தொடர்ந்தும் உதவும் என அந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
கல்வியே எமக்கு அந்தஸ்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுத்தருகிறது.
எனவே வடக்கு கிழக்கு மாணவர்களின்  கல்வி முன்னேற்றத்திற்கு புலம்பெயர்ந்த கனடாவில் வாழ்கின்ற உறவுகள் தொடர்ந்து உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளை நிதியத்தின் ஏற்பாட்டில் பல்கலைகழக மாணவர்களின் கல்விக்கான கடன் வழங்கும் நிகழ்வின் வருடாந்த பொதுக் கூட்டம் இன்று இடம்பெற்றது.
இதில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்குமபோதே ஹரி ஆனந்தசங்கரி இதனை குறிப்பிட்டார்.
கல்வி எமது மிகப்பெரும் அழிக்க முடியாத சொத்து,  எனவே இந்தக் கல்விக்கு தாம் தொடர்ந்தும் உதவி செய்வோம்; எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.