நாளாந்தம் 10 மணிநேர மின்வெட்டை எதிர்நோக்கும் அபாயம்

179 0

நாட்டின் நிலக்கரி கையிருப்பு இம்மாதம் 31ஆம் திகதி முடிவடையும் நிலையில் நுரைச்சோலை  ‘லக்விஜய’ அனல்மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்கள்  நிறுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன இன்று செவ்வாய்க்கிழமை (டிச. 20) தெரிவித்துள்ளார்.

நாட்டின் மின்சார விநியோகத்தில் 45 சத  வீதமான மின்சாரத்தை நுரைச்சோலை அனல்மின் நிலையம் வழங்குகின்றன.  இந்த மூன்று இயந்திரங்களும் செயலிழந்தால் நாளாந்தம்  10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்படும் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

நீர்மின் உறபத்தி  நிலையங்களில் நீர்மட்டம் 75 சத  வீதமாக குறைந்துள்ளதால், அடுத்த சில மாதங்களில் நீர்மின்சாரம் அதன் அதிகபட்ச கொள்ளளவை எட்டுமா என்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளதாகவும், இதனால் நாடு இயங்க முடியாத நிலை ஏற்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.