யேர்மனி போகும் நகரத்தில் நடைபெற்ற “தேசத்தின்குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வணக்க நிகழ்வு.

454 0

17.12.2022 சனிக்கிழமை “தேசத்தின்குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பதினாறாம் ஆண்டு வணக்க நிகழ்வு யேர்மனி போகும் நகரத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ம் ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்து தமிழீழத்தின் தேசத்தின் குரலாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு தமிழீழ விடியலில் வரலாறானார்.

தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழீழ மக்கள், விடுதலைப்போராட்டபாதையில் இன்றும் நிரப்பமுடியாத இடமாக காணப்படுகின்றது, தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் ஆழமாக நேசித்த ஒரு விடுதலைவீரனாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காணப்பட்டார்.

இந்நிகழ்வில் வருகைதந்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு தீபம் ஏற்றி, மலர்தூவி தங்கள் இதயவணக்கத்தைச் செலுத்தினார்கள். தொடர்ந்து எழுச்சி நடனங்கள், விடுதலைப் பாடல்கள், சிறப்புரைகள்,தாளநயம் என்பன இடம்பெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனிக் கிளையின் அரசியற் பிரிவினரால் தமிழீழத்தின்  வரலாறுகள் அடங்கிய ஈழத்தமிழர் தொடரும் போராட்டம் எனும் யேர்மன் மொழியிலான புத்தகம் வெளியிட்டு வைக்கப்பட்டது.