பல்கலைக்கழகங்களை பாதுகாக்க மனித உரிமை அலுவலகம், பொலிஸ் பிரிவு ஸ்தாபிக்கப்பட வேண்டும்

290 0

அரச பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரின் கீழ் இயங்கும் மனித உரிமைகள் அலுவலகம் மற்றும் பொலிஸ் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள்  உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழக மாணவர் கும்பலினால் தாக்குதலுக்கு இலக்கான அவர் சனிக்கிழமை (டிச. 17) இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில்,

நான் 2015ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக இருந்த போது  பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் அலுவலகம் மற்றும் பொலிஸ நிலையம் ஒன்றை நிறுவுவதற்காக பிரேரணையை சமர்ப்பித்த போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

பல்கலைக்கழகங்களில் நிறுவப்படும் பொலிஸ் பிரிவுகளில் பட்டதாரிகள் அல்லது அதற்கு சமமான கல்வி தகுதி உள்ளவர்கள் இருக்க வேண்டும். மேலும் துணைவேந்தரின் கீழ் பொலிஸ் பிரிவு இருக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கும் எவரையும் கைது செய்வதற்கும் தேவையான அதிகாரங்கள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

இந்த பிரேரணை அமுல்படுத்தப்பட்டால் எதிர்வரும் வருடங்களில் மாணவர் பகிடிவதை முற்றாக நிறுத்தப்படும்  என்றும் அவர் குறிப்பிட்டார்.