புலமைப் பரிசில் பரீட்சை இன்று

211 0

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

இம்முறை நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்து 34, 698 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இதற்காக 2,894 பரீட்சை மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இம்முறை பரீட்சைக்கான அனுமதி அட்டை வழங்கப்பட மாட்டாது.

அனுமதி அட்டையில் மாணவர்களிடம் கையெழுத்து பெறும் நேரத்தை மீதப்படுத்துவதற்கான இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக பரீட்சை ஆரம்பமாவதற்கு முன்னர் வருகை பதிவு ஆவணமொன்றில் கையெழுத்து பெறப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை பரீட்சையில் பகுதி இரண்டுக்கான வினாத்தாள் முதலில் வழங்கப்படும் என்பதாகும். கடந்த பரீட்சையின் போது நேரம் தொடர்பில் பரீட்சை திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றமையால், இம்முறை பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு பரீட்சை திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.