கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பிரபல தொழிலதிபர் உயிரிழப்பு

76 0

பிரபல தொழிலதிபரும், ஜனசக்தி குரூப் நிறுவன பணிப்பாளருமாகிய 52 வயதுடைய தினேஷ் சாப்டர் கொழும்பு, பொரளை மயானத்திற்கருகில் கார் ஒன்றினுள் கட்டிவைக்கப்பட்ட நிலையில் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொழும்பு – பொரள்ளை மயானத்திற்கு அருகில் கார் ஒன்றிற்குள் கைகள் கட்டப்பட்ட நிலையில், நேற்று இரவு மீட்கப்பட்ட குறித்த தொழிலதிபர் தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.