பிரித்தானியாவில் நடைபெற்ற ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பதினாராம் ஆண்டு வணக்க நிகழ்வு

382 0

தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பதினாராம் ஆண்டு வணக்க நிகழ்வு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரினால் நியூமோல்டன் பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த்தது.தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ம் ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்து தமிழீழத்தின் தேசத்தின் குரலாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு தமிழீழ விடியலில் வரலாறானார்.

தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழீழ மக்கள், விடுதலைப்போராட்டபாதையில் இன்றும் நிரப்பமுடியாத இடமாக காணப்படுகின்றது, தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் ஆழமாக நேசித்த ஒரு விடுதலைவீரனாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காணப்பட்டார்.

தமிழர் ஒருங்கிணைப்பு குழிவின் வடமேற்க்கு பிராந்தியத்தில் மகளிர் அணியுடன் செயற்பாட்டாற்றி வரும் திருமதி வசந்தி பாலன் அவர்கள் பொதுச்சுடர் ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார் . தொடர்ந்து நிகழ்விற்க்கான ஈகைசுடரினை தமிழர் ஒருங்கிணைப்பு குழு கலைபண்பாட்டுக் கழகத்தினுடன் நீண்டகாலமாக பயணிக்க்கும் வல்வை கலைகூட ஆசிரியை திருமதி சுஜித்தா ஆனந்த் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
பால அண்ணன் நினைவுசார்ந்த உரைகள் மற்றும் கவிதை நிகழ்வுகள் இடம்பெற்றன.

உறுதி மொழியோடு நிகழ்வானது நிறைவு பெற்றது.