வீடொன்றில் இருந்து இரண்டு குண்டுகள் மீட்பு(காணொளி)

476 0

மட்டக்களப்பில் வீடொன்றில் இருந்து இரண்டு குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி, உப்போடை பகுதி வீடொன்றில் இருந்து இரண்டு குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

உப்போடை – தம்பாப்பிள்ளை வீதியில் உள்ள வீட்டில் நீர்க்குழாய் பொருத்துவதற்காக குழி தோண்டியபோது, பிளாஸ்டிக் கப் ஒன்றுக்குள் பொலித்தின் பைகளால் சுற்றப்பட்ட நிலையில் இரண்டு கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸாரும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் குண்டுகளை மீட்டனர்.

கடந்த காலத்தில் குறித்த வீட்டிற்கு அருகில் பாதுப்பு படையினரின் காவலரண் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.