கல்முனை பஸ் நிலைய சர்ச்சை மேயரால் சமூக தீர்வு

137 0

கல்முனை பஸ் நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களையும் தனியார் பஸ்களையும் தரிக்கச் செய்வதில் இரு தரப்பினரிடையே நிலவி வந்த சர்ச்சை, மாநகர மேயரால் சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டது.

பஸ் நிலையத்துக்கு கள விஜயம் மேற்கொண்ட மாநகர மேயர்  ஏ.எம் றகீப், இரு தரப்பினரதும் கோரிக்கைகளை உள்வாங்கி, எவருக்கும் பாதகமில்லாத வகையில் இட ஒதுக்கீடுகளை மேற்கொண்டார். இதன் பிரகாரம், இரு பிரிவு பஸ்களையும் நிறுத்துவதற்கான இடங்கள், வெள்ளைக் கோட்டால் அடையாளமிடப்பட்டன.

இதன்போது, ஓட்டோ ஓட்டுநர்களுக்கும் பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் இட ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்களப்பணியில் மேயருடன் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம் அமீர், மாநகர சபையின் வேலைகள் அத்தியட்சகர் வி. உதயகுமரன், வருமான பரிசோதகர் சமீம் அப்துல் ஜப்பார் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.