
குறித்த சம்பவம் நேற்று (12) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது குழந்தை ஆபத்தான நிலையில் இருந்ததாக கம்பஹா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த இலேபெரும தெரிவித்தார்.
குழந்தையின் வயிற்றில் உதைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதும், நள்ளிரவு 12 மணியளவில் குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் காரணமாக குறித்த மரணம் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
உயிரிழந்த குழந்தையின் தாயை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நபரே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.