உயிரிழந்த விசேட வைத்தியர் ஒருவரின் பொரளையிலுள்ள பல கோடி ரூபா பெறுமதியான இரண்டு மாடி வீட்டைக்கோரி, போலி கைத்துப்பாக்கி மூலம் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பெண் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பெண், உயிரிழந்த பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான ‘வணாத்தை ஒல்கட்’ என்பவரின் சிறிய தாய் எனவும், குறித்த வைத்தியர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதி விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.

