மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களால் நோயாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனை ஆட்சேபித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளைய தினம் அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.
நாளை காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும் இந்த பணிப் புறக்கணிப்பு மறுநாள் காலை 8 மணிவரை நீடிக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அநுருந்த பாதனிய தெரிவித்துள்ளார்.

