13 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் போதாது – சந்திரிகா

222 0

சுதந்திரத்தின் பின்னர் அனைத்து சமூகத்தினருக்கும் சம சந்தர்ப்பம் வழங்கக்கூடிய நாடொன்றை கட்டியெழுப்புவதற்கு முக்கியத்துவம் அளிக்காமையே 30 வருட யுத்தத்துக்கு காரணம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

முஸ்லிம் கல்வி மேம்பாட்டுக்கு பணியாற்றிய ஓய்வு பெற்ற அதிபர் பழீலா பீ. ஜுரங்பதியின் 50 வருட சேவையை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனை தெரிவித்தார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வாக சிறுபாண்மையினருக்கு விரிவான ஒரு உத்தரவாதம் தேவை என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி 13 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் போதாது என குறிப்பிட்டார்.

13 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் போதுமானதாக இருந்தால் வடக்கு, கிழக்கில் போர் இடம்பெற்றிருக்காது என அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது