சட்டவிரோத குடியேறிகளை விரைவாக வெளியேற்றும் நடவடிக்கையில் அமெரிக்கா

299 0

அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை விரைவாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கான புதிய விதிமுறைகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் பாதுகாப்பு தரப்பினருக்கு விடுத்துள்ளது.

இதன்படி ஆவணங்கள் இன்றி தங்கியுள்ள சட்டவிரோத குடியேறிகளை விரைவாக நாடுகடத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புதிய விதிமுறையின் கீழ், ஆட்கடத்தல் மற்றும் சிறுகுற்றங்களுடன் தொடர்புடைய குடியேறிகள், ஏனைய பாரிய குற்றங்களைப் புரிந்துவர்களாகவே கணக்கில் கொள்ளப்படவுள்ளனர்.

இதன் ஊடாக அவர்களை விரைவாக நாடுகடத்த முடியும் என்று நம்பப்படுகிறது.

அமெரிக்காவில் சுமார் 11 மில்லியன் சட்டவிரோத குடியேறிகள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.