கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலைப் பகுதியில் இன்று சனிக்கிழமை (நவ 26) அதிகாலை 4 மணியளவில் பெறுமதி மிக்க பாலை மரக்குற்றிகளை ஏற்றிப் பயணித்த கப் ரக வாகனம் பூநகரி பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு, வாகன சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக பாலை மரக்குற்றிகள் கடத்திச் செல்லப்படுவது தொடர்பாக பூநகரி பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலேயே பொலிஸார் இந்த சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சுற்றி வளைப்பின்போது 5 பாலை மரக்குற்றிகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்தி, சந்தேக நபரை இன்று (நவ 26)கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

