கிளிநொச்சி பசுமைப்பூங்கா வளாகத்தில் நகரத்திற்கான மாவீரரின் பெற்றோர், உரித்துடையோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் பகல் 11 மணிக்கு உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.



இதன்போது, ஈழ விடுதலைப் போரில் தம்மை அர்ப்பணித்த மாவீர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.


இந்நிகழ்வில் மாவீர்ர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் தமிழ் உணர்வாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

