யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சகாயபுரம் பகுதியிலுள்ள ஒரு வீட்டினருகில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபரை பொலிஸார் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (நவ 15) கைதுசெய்துள்ளனர்.
இந்த கசிப்பு உற்பத்தி தொடர்பாக இளவாலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார் குறித்த வீட்டினை முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போதே 28 வயதுடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 5 லீட்டர் கோடா மற்றும் ஒரு லீட்டர் கசிப்பு முதலியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், இந்த கசிப்பு உற்பத்தி தொடர்பில் சந்தேக நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

