நாளை இடம்பெறவுள்ள ஜி20 உச்சிமாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்திக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்றோம் பேச்சுவார்த்தைகளிற்கான முன்நிபந்தனைகள் எதுவுமில்லை,ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை எதிர்பார்த்துள்ளேன் என அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளிற்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்புமாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஆரம்பமாக அமையலாம்
இதேவேளைதனது நாடு அவுஸ்திரேலியாவை சந்திக்க தயாராக உள்ளது என சீனாவின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஊடகங்களிற்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் பிரதமர் லீ தனது நாடு சந்தர்ப்பத்தை பயன்படுத்த விரும்புகின்றது அவுஸ்திரேலியாவை சந்திக்க தயாராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சீனா அவுஸ்திரேலியாவை சந்திக்க தயாராக உள்ளது, சீன அவுஸ்திரேலிய இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 50 வருடங்களாவதை குறிக்கும் நிகழ்வுகள் மூலம் கிடைக்கும் சந்தர்ப்பத்தை இரு நாட்டு உறவுகளை பேண்தகுதன்மை கொண்டதாக மாற்றவிரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சீன அவுஸ்திரேலிய தலைவர்கள் மத்தியிலான சந்திப்பு தற்போது காணப்படும் வர்த்தக தடைகளிற்கு தீர்வை காண்பதற்கு உதவும் என அவுஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

