வீரவங்சவின் சிறை வகுப்பில் 40 பேர்! இரண்டு கழிப்பறைகள்!!

262 0

வெலிகடை விளக்கமறியல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கடந்த வாரம் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்த போது சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்துள்ளார்.

அப்போது சிறையில் உள்ள வசதிகள் குறித்து சபாநாயகர் வீரவங்சவிடம் கேட்டுள்ளார்.

தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை வகுப்பில் 40 கைதிகள் இருப்பதாகவும் இரண்டு கழிப்பறைகள் மாத்திரமே உள்ளதாகவும் விமல் சபாநாயகரிடம் கூறியுள்ளார்.

குளிப்பதற்கு பூ குழாய் (ஷவர்) இருக்கின்றதா என சபாநாயகர் வினவியுள்ளார்.

அதற்கு பதிலளித்த வீரவங்ச, பூ குழாய் இல்லை எனவும் தண்ணீர் தாங்கி இருப்பதாகவும் வாளி மூலம் தண்ணீரை அள்ளி குளிப்பதாகவும் சபாநாயகரிடம் குறிப்பிட்டுள்ளார்.