அமெரிக்காவுடன் கோத்தபாய பாதுகாப்பு ஒப்பந்தம்!

230 0

அமெரிக்காவுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் பூர்த்தியடையவுள்ளது.

எனினும் இந்த ஒப்பந்தத்தை மீண்டும் புதுபித்துக் கொள்ளும் நடவடிக்கையில் சமகால அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2007ஆம் ஆண்டு மஹிந்தவின் ஆட்சியின் போது, அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் நடப்பாண்டுடன் நிறைவடையவுள்ளது. 10 வருடம் முழுமையடைகின்றமையினாலே இந்த ஒப்பந்தம் இரத்தாகவுள்ளது.

எனினும் கோத்தபாயவினால் ஏற்படுத்திக் கொண்ட இந்த ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிப்பதற்காக வெளிவிவகார அமைச்சு மீண்டும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய பெருங்கடல் பிரதேசத்திற்கு வருகை தரும் அமெரிக்க கப்பல் மற்றும் இராணுவத்தினருக்கு உணவு மற்றும் தங்குமிடம் உட்பட இராணுவ வசதி வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளது.