ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பொதுச்செயலாளர் ரவிகருணாநாயக்க

164 0

ரவிகருணாநாயக்க ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்படவுள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரவிகருணாநாயக்கவை பொதுச்செயலாளராக நியமிக்கவேண்டும் என கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் விரும்புவதாக  அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவும் இதனை விரும்புகின்றார் என தெரிவித்துள்ள அரசியல் வட்டாரங்கள் இது குறித்து ரவிகருணாநாயக்கவுடன் அவர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளன.

ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்க பண்டார ஆளுநராக நியமிக்கப்படுவார் எனவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் ஆராய்வதற்காக நாளை ரவிகருணாநாயக்கவையும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களையும்  ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.

கட்சியின் தேசிய அமைப்பாளராக ஹரீன்பெர்ணான்டோ நியமிக்கப்படுவார் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.