இலங்கை புதியதோர் எதிர்காலத்தை நோக்கி – 2023 ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் முழுமையான உரை

178 0

2023 ஆண்டுக்கான வரவுசெலவுதிட்ட முன்மொழிவுகள் மீது நாட்டின் சாதகமான வேறுபாட்டினை உருவாக்குகின்ற பயணத்தில்  கைகோர்க்குமாறும் உறுதுணையைளிக்குமாறும் நான் உங்கள்  அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன் என ஜனாதிபதியும் நாட்டின்  23 ஆவது நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்தார்.

அத்துடன் நாம்  இம்முன்மொழிவுகளை  பின்னணியாக்கி கொண்டு, புதிய பொருளாதார அடிப்படை ஒன்றினை தயார்படுத்துவோம். அதற்கென தேசிய  பொருளாதார கொள்கை கட்டமைப்பை  உருவாக்கிக் கொள்வோம். அடுத்து வரும் 25 ஆண்டுகள் முழுவதும் அக்கொள்கைக் கட்டமைப்பை நடைமுறைபடுத்துவோம் எனவும் குறிப்பிட்டார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை ஜனாதிபதியும் நாட்டின் 23 ஆவது நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க இன்று திங்கட்கிழமை (14) பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து  உரையாற்றிய பின்னரே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த பயணத்திற்கு பங்களிப்பு வழங்குவதற்கு தேவையான பின்னணியை  இப்போது நான்  இந்த பாராளுமன்றத்திற்கு வழங்கியுள்ளேன்.

ஒரு பக்கத்தில் பாராளுமன்றத்தின் துறைசார் செயற் குழுக்கள்,  மறுபக்கத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் என்ற மக்கள் சபை,  அதற்கு மேலதிகமாக  அரச நிதி மற்றும் அரச நிதி சேவை  பற்றிய செயற் குழுக்கள் பலவற்றை நாம் முன்மொழிந்துள்ளோம்.

நான் அண்மையில் சபாநாயகரின் கவனத்தை ஈர்த்தது போன்று,  இந்த செயற்குழு இதுவரையிலும் இந்த பாராளுமன்றத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

விசேடமாக நான் சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத்திட்ட முன்மொழிவு அரச உத்தியோகத்தர்களின் மூலம் அரச  பொறிமுறைகளினூடாக நடைமுறைப் படுத்தும் போது துறைசார் செயற்குழுக்களுக்கு பாரியளவு வேலைகளை நிறைவேற்ற முடியும்.

அரசாங்க செலவினத்தை குறைத்துக்கொள்ளும்  முயற்சிக்கும் நிதி பற்றிய செயற்குழுக்களுக்கு பயன்மிக்க விதத்தில் தலையீடு செய்யவும் முடியும்.

அதனால், அந்த சகல செயற்குழுக்களையும் துரிதமாக நடைமுறைப்படுத்துமாறு நான் இந்த பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கின்றேன்.  அப்போது புதிய பயணத்திற்கு, புதிய தோற்றத்தின் முயற்சிக்கான  சந்தர்ப்பத்தை எமக்கு உருவாக்கிக் கொள்ள முடியும்.

அந்த சந்தர்ப்பத்திலிருந்து அதிகபட்ச பயனைப்பெற்று நாம் எமது  உண்மையான தேசிய வளங்களுக்கு, எமது இளைஞர்  பரம்பரைக்கு சிறந்த எதிர்காலமொன்றை  உருவாக்கிக்கொடுப்பதற்கு  முயற்சிப்போம்.

அதற்கமைவாக புதிய பொருளாதார அடிப்படையினூடாக நாட்டை மீண்டும் உயர்த்தி வைக்கும்  முயற்சிக்கு செயல் வடிவிலான மற்றும் செயல் ரீதியான பங்களிப்பை வழங்குமாறு நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கிய ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவின் 2023 ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட முழுமையன உரைக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

https://cdn.virakesari.lk/uploads/medium/file/194828/77th_Budget_Speech-2023__Tamil_.pdf