யேர்மனி போகும் நகரில் நடைபெற்ற பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு.

408 0

02.11.2007அன்று சிறிலங்கா வான்படைத் தாக்குதலில் வீரச்சாவை தழுவிக்கொண்ட தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்பட ஏழு வீரவேங்கைகளின் 15 ஆவது வருட வீரவணக்க நிகழ்வு, கடந்த சனிக்கிழமை (12.11.2022) யேர்மனி போகும் நகரத்தில் உணர்வுபூர்வமாக நடந்தேறியது. இந்நிகழ்வில் முறையே அகவணக்கம் மற்றும் ஈகைச்சுடர் ஏற்றேல்இ பொதுமக்களின் மலர் வணக்கத்துடன் மாவீரர் கானங்கள் இசைக்கப்பட்டு இனிதே நிறைவுற்றது.