பாதுக்க, அங்கமுவ பிரதேசத்தில் வீதியில் செல்லும் வாகனங்களை வாள்கள் மற்றும் கத்திகளுடன் சோதனையிடும் கும்பலால் கிராம மக்கள் அச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கமுவ சிவில் பாதுகாப்புக் குழுவின் தலைவரின் வீட்டிற்கு சென்று மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் அவர் தலைமறைவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பாதுக்க பொலிஸில் முறைப்பாடு செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

