நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பிலவின் செயற்பாடு, கூட்டு எதிர்க்கட்சிக்குள் பாரிய பிளவை வெளியே கொண்டுவரும் சந்தர்ப்பமாக அமைவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமகால நிதியமைச்சருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் உதய கம்பன்பில முறைப்பாடு செய்திருந்தார். நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இலங்கை சுங்க பிரிவுக்கு 25000 ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாக அதில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால், நல்லாட்சி அரசாங்கத்தின் மோசடிகளை சேகரிக்கும் உறுப்பினர்களிடம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய வெஹிகல் லங்கா நிறுவனத்தின் உரிமையாளர் ஹர்ஷ பிரபாத் சில்வா, ராஜபக்ச குடும்பம் மற்றும் பிரசன்ன ரணதுங்கவுக்கு நெருக்கமானவர் என குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் பிரசன்ன ரணதுங்கவும் தனிப்பட்ட ரீதியில் இது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் அறிவித்துள்ளார்.
அங்கு ராஜபக்சவின் மகன்களுக்கு மற்றும் தனக்கு தனிப்பட்ட ரீதியில் வாகனங்கள் வழங்கி, தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஹர்ஷ பிரபாத் உதவிய முறையினை பிரசன்ன விளக்கியுள்ளார்.
எனினும் மஹிந்த சிங்கப்பூர் நோக்கி சென்றவுடன் கம்மன்பில மற்றும் அவரது டொப் 10 குழுவிற்கு பொறுப்பான உறுப்பினர் குழு தங்கள் முறைப்பாட்டை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு நெருக்கமானவர்கள் கூட்டு எதிர்க்கட்சிக்குள் செயற்படுகின்றனர். அவர்களுக்கு இடையில் காணப்படும் பிளவு மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனைகளை கண்டுக் கொள்ளாத நிலைக்கு காரணம் என கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

