இரு மீனவ குழுக்களுக்கிடையே மோதல் : 14 பேர் காயம், 8 வாடிகள், 13 படகுகள் எரிப்பு

244 0

மாதுருஓயா நீர்த்தேக்க மீனவர்களுக்கும் பதியத்தலாவ மீனவர்களுக்குமிடையில் ஏற்பட்ட மோதலின்போது 14 பேர் காயமடைந்துள்ளதாக மஹாஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த 14 பேர் மஹாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக மஹாஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாதுரு ஓயாவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பதியத்தலாவ மீனவர்களை மாதுரு ஓயா மீனவர்கள்  மடக்கிப் பிடித்த சம்பவத்தையடுத்தே  இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் 8 வாடிகள், 13 படகுகள் மற்றும் பெருமளவிலான மீன்பிடி வலைகள்  தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக மஹாஓயா பொலிஸார் தெரிவித்தனர்.