வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் 2023 ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றம்

95 0

2023 ஆண்டுக்கான பாதீடு வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் பெருன்பாமை வாக்குகளால் நிறைவேறியுள்து.

கடந்த வெள்ளிக்கிழமை வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது 2023 ஆண்டுக்கான பாதீட்டுக்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.

குறித்த பாதீட்டின் அமர்வில் ஐந்து உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை மொத்தம் 25 பேரை கொண்ட சபையில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் உள்ளனர்.

அதில் 09 ஈபிடிபி உறுப்பினர்கள் 4, தமிழ்தேசிய மக்கள் முன்னணி  06 ஐதேக 03, சுயேட்சை 02 இந்த நிலையில், ஈபிடிபி உறுப்பினர்கள் 3 நடுநிலமை ஒருவர் கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை, தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மூன்று உறுப்பினர்கள் சமூக மளிக்கவில்லை, சுயேட்சை புழு உறுப்பினர் ஒருவர் சமூகமளிக்கவில்லை, உள்ளுராட்சி மன்றங்களுக்கான பாதீடு  வருடத்தின்  டிசம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன் நிறைவேற்றப்பட வேண்டும்.

என்பது உள்ளூராட்சி மனரறங்களுக்கான கால எல்லையாகும் அந்த வகையில் வலிகாமம் மேற்கு பிரதேச சபை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுடதுடன் உறுப்பினர்களின் தீர்மானங்களை உள்வாங்கி எந்தவித குழப்பங்களும்மின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேவேளை பாதீடு நிறைவேறியதையடுத்து பிரதேச சபை யின் பங்குபற்றிய உறுப்பினர்களால் சபையின் தவிசாளர் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.