நெடுந்தீவு பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

74 0

நெடுந்தீவு பிரதேசத்தில் பல்வேறு கிராம மட்ட அமைப்புகள் செயல்பாடுகள் இன்றி புனரமைக்கபடாது காணப்படுகின்ற போதும் சிறந்த முறையில் செயல்பட்டு கொண்டு வருகின்ற அமைப்புகளை குழப்புகின்ற விதத்தில் நெடுந்தீவு பிரதேச சபை செயல்படுவதாக  நெடுந்தீவு  தெற்கு கமக்கார அமைப்பு  குற்றஞ் சாட்டியுள்ளது.

நெடுந்தீவு தெற்கு கமக்கார அமைப்பின் தலைவர் க பகிரதன் இன்று (11) வியாழக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்

நெடுந்தீவு பிரதேசமானது யாழ்ப்பாணத்திலிருந்து நீண்டதுரத்தில்  கடலால் சூழப்பட்ட பிரதேசமாகும்  அத்தகைய பிரதேசம் அனைவராலும் கைவிடப்பட்ட பிரதேசமாக  காணப்படுகிறது.

அதிகளவான சுற்றுலா பயணிகளை வரவேற்கும் இடமாக இருக்கும் நெடுந்தீவு பிரதேசத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு எற்ற நடவடிக்கைகளை பிரதேச சபையோ துறைசார்ந்தவர்களோ மேற்கொள்ளமுடியாத நிலை காணப்படுகிறது பிரதேச சபையின் எல்லைக்குட்பட்டு பல வேலைகளை செய்வதற்கு இருந்தும் அதனை கொண்டு நடத்துவதற்கு உரிய அதிகாரிகளோ, துறைசார்ந்தவர்களோ தயாரில்லாத நிலை காணப்படுகிறது.

தவிசாளர் பிரதேசத்தில் இல்லாத நிலையும் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு எற்ற மனநிலையில்லாத நிலையும்  காணப்படுகிறது நெடுந்தீவு பிரமேசத்தில் பல கிராம மட்ட அமைப்புகள் செயல்படாது உள்ளபோதும் அவற்றை புனரமைக்க முடியாத நிலை காணப்படுகிறது.

செயல்படுகின்ற அமைப்புகளை குழப்பும் விதத்தில் தவிசாளர் செயல்படுகின்றார் அதுமட்டுமன்றி அதிகாரிகளையும் அச்சுறுத்துகின்ற நிலையே காணப்படுகிறது. உள்ளுராட்சிக்குட்பட்ட பல வீதிகள் புனரமைக்கபடாத நிலைகாணப்படுகிறது, விவசாய வீதிகள் புனரமைக்கப்பட வேண்டும் அவையும் மேற்குள்ளப்படாது உள்ளது.  எனவே நெடுந்தீவு பிரதேசத்தில் அக்கறை கொண்ட புலம்பெயர் தேசத்து உறவுகள் அரச அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் குறித்த  விடயங்களை கவனத்தில் எடுத்து எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.