வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் சிக்கல்

423 0

வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையினை மாற்றும் நோக்கில் கடந்த பாதீட்டில் எடுக்கப்பட்ட முடிவினை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஜி.எஸ். வித்தானகே குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பணியாளாகளின் குறைந்த பட்ச வேதனத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்படவுள்ளது.

இந்தநிலையில், இலங்கையின் இந்த தீர்மானத்திற்கு அமைய மத்திய கிழக்கு நாடுகள் இலங்கை பணியாளர்களை பெறுவதில் காட்டும் ஆர்வத்தை குறைத்துள்ளது.

இதன்காரணமாகவே வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடம் வெளிநாட்டு வேலை பணியாளர்கள் ஊடாக 720 கோடி அமெரிக்க டொலர் அந்நிய செலாவாணியாக பெறப்பட்டதாகவும் வித்தானகே குறிப்பிட்டுள்ளார்.