மழையுடனான தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் டெங்கு பரவும் அபாயம் அதிகரித்துள்ளதுடன், கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் நுளம்புகளின் பெருக்கம் நான்கு மடங்குகளாக அதிகரித்துள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக அச்சங்கத்தின் தேசிய அமைப்பாளர் திஸ்னக திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 42 வீதமானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
டெங்கு நோய் பரவும் அபாயம் காரணமாக நாட்டில் சகல பொலிஸ் நிலையத்தின் சமூக பொலிஸ் பிரிவுகளின் ஊடாக சிரமதான வேலைத்திட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

