வற் வரி திருத்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணில்லை

188 0

பெறுமதி சேர் வரி (VAT) திருத்த சட்டமூலம் முழுவதுமாக அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளதாக  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.

பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதனையடுத்தது இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின்போதே உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.

 

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பெறுமதி சேர் வரி திருத்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன் வியாக்கியானத்தை உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்துக்கு அனுப்பி இருக்கின்றது. அதன் பிரகாரம்,

மனுக்கள் மீதான விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பனங்கள் அடிப்படையில் உயர் நீதிமன்றம் சட்டமூலத்தில் சில திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.

அத்துடன் பாராளுமன்ற குழுநிலையின்போது திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் பெறுமதி சேர் வரி (VAT) திருத்த சட்டமூலம் முழுவதுமாக அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளது என்றார்.