பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே சார்பில் அவரது சட்டத்தரணிகள் சமர்ப்பித்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இன்று (10) அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, வசந்த முதலிகேவை நீதவான் முன்னிலையிலும் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையிலும் ஆஜர்படுத்தி முழுமையான அறிக்கையை கோருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

