இலங்கையின் அரசியலில் நிகழ்கின்ற மாற்றங்கள் தொடர்பில் இந்திய அரசு மிகுந்த அவதானம்

326 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் அரசியலுக்கு பிரவேசித்திருப்பதன் மூலம், இலங்கையின் அரசியலில் நிகழ்கின்ற மாற்றங்கள் தொடர்பில் இந்திய அரசு மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் அரசியலில் பிரவேசித்திருப்பதன் ஊடாக அரசியல் வட்டாரத்தில் பல மாற்றங்கள் ஏற்படுவதுடன், பல பிளவுகளும் ஏற்படலாம் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய இலங்கை அரசியல் சூழ்நிலைகள் மற்றும் சம்பவங்களை கருத்திற் கொண்டு ஆராயும் போது இந்த விடயம் தௌிவாகின்றது என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இருக்கும் அரசியல் உறுப்பினர்களுக்கிடையிலும் பிளவுகள் ஏற்படலாம் என்றும் இது தொடர்பாக இந்தியா அவதானத்துடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை தொடர்பான முக்கிய பிரதிநிதியான ராம் மாதவ், கடந்த பெப்ரவரி 10ம் திகதி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை கொழும்பில் வைத்து சந்தித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இருதரப்பு விவகாரங்கள் மற்றும் நான்காவது இந்து சமுத்திர மாநாடு பற்றியும் இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அவரின் விஜயத்தை அடுத்து இந்திய வௌிவிவகார செயலாளர் எஸ். ஜெயசங்கர் இன்று இலங்கை விஜயம் செய்யவுள்ளமையும் கூறத்தக்கது.