உணவு தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்கள், சுகாதாரத்துக்கு பாதுகாப்பான முறையில் உணவு தயாரிக்கப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்தும் ஜீ.எம்.பி. சான்றிதழை இந்த ஆண்டு முதல் பெற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை கட்டளைகள் நிறுவனம் கூறியுள்ளது.
தற்பொது வரை அதற்கான விண்ணப்பங்கள் சுமார் 40 கிடைத்துள்ளதுடன், அதில் 10 நிறுவனங்களுக்கு அந்த சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் டீ.ஜீ.ஜீ. தர்மவர்தன கூறினார்.
எவ்வாறாயினும் உணவு பாதுகாப்புக்கான எச்.ஏ.சி.சி.பி. சான்றிதழை பெற்றுள்ள நிறுவனங்கள், ஜீ.எம்.பி. சான்றிதழை பெற்றுக் கொள்வது கட்டாயமில்லை என்று டீ.ஜீ.ஜீ. தர்மவர்தன மேலும் கூறினார்.

