காங்கேசன்துறை கடற்படை பிரிவினரால் நெடுந்தீவு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மீன்பிடி படகொன்றில் இருந்து 429 கிலோ 40 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரும் 09 ஆம் திகதி புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கடல் பகுதியில் காங்கேசன்துறை கடற்படையினர் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே மீன்பிடி படகொன்றிலிருந்து 429 கிலோ 40 நிறையுள்ள கேரள கஞ்சா இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 37 மற்றும் 44 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் முழங்காவில் மற்றும் மண்டதீவு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் காங்கேன்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

