இராணுவ அம்பியூலன்ஸில் ஆட்டிறைச்சியை கொண்டு சென்ற இரு இராணுவ வீரர்கள் உள்ளிட்ட மூவர் கைது !

178 0

இராணுவ அம்பியூலன்ஸ் ஒன்றில் 3  கிலோ ஆட்டிறைச்சியை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் சாரதி உட்பட இரு லான்ஸ் கோப்ரல்கள்  மதுறுஓயா பூங்காவில் வைத்து கைது செய்யப்பட்டதாக மதுறுஓயா வனவிலங்கு அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் மாவனாகம இராணுவ முகாமைச்  சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள்  தெஹியத்தகண்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், மாதுறுஓயா பூங்கா பராமரிப்பாளர் டி.எஸ். ஜயசோம ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இராணுவ அம்பியூலன்ஸ் மூலம் இறைச்சியை ஏற்றிச் செல்வதாக வனஜீவராசிகள் அலுவலகத்துக்கு  கிடைத்த தகவலையடுத்து, அம்பியூலன்ஸுடன்  இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.