சுதுமலையில் வீடு புகுந்து திருட்டு!

196 0

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுமலை வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 3 இலட்சத்து நாற்பத்து இரண்டாயிரம் ரூபா திருடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வீட்டில் உள்ளவர்கள் மேல் மாடியில் தூங்கிவிட்டு  நேற்று (06) காலை எழுந்து வந்து கீழே பார்த்தவேளை வீடு உடைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பணம் வைத்த இடத்தினை பார்த்தவேளை, வைக்கப்பட்ட மேற்குறித்த அளவு பெறுமதியான பணம் களவு போயுள்ளமை தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.